பாசமுடன் வளர்த்த காளைக்கு சிலை வைத்த விவசாயி


காளையின் நினைவாக, விவசாயி ஒருவர், அதற்கு சிலை வைத்துள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையம், பனங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து, 43. தன் தோட்டத்தில், காங்கேயம் இன காளை ஒன்றை, 10 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். அந்தக் காளை, 2018, செப்., 16 இல் உடல்நலக் குறைவு காரணமாக இறந்தது.

பாசமுடன் வளர்த்த காளை பிரிந்ததை எண்ணி வேதனைப்பட்ட அவர், அதன் நினைவாக ஒரு நினைவிடம் அமைக்க முடிவு செய்தார். தோட்டத்தின் வடக்கு பகுதியில், இறந்த காளையின் சிலை வடிவமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. 

செல்லமுத்து கூறுகையில், பாசமுடன் வளர்த்த காளை இறப்பை மறக்க முடியாமல், சிலை வைத்துள்ளேன். காங்கேயம் இன காளைகளை, அழிவிலிருந்து காப்பாற்றும் வகையில், நான்கு காளைகள் வைத்து, இனவிருத்தி செய்து வருகிறோம்.

Post a Comment

Previous Post Next Post