இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

 


இலங்கை கிரிக்கெட்டின் புதிய பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி ரயன் வென் நீகெக் தேசிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும், ஜோர்டன் கிரோகரி தேசிய களத்தடுப்பு மற்றும் சுழல் பந்துவீச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரயன் வென் நீகெக் கடந்த 2023 – 2026ஆம் ஆண்டுவரை நெதர்லாந்து அணியின் உதவி பயிற்றுவிப்பாளராகவும், இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

இவர் தேசிய அணி உட்பட இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சு தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளார். இவரின் பதவிக்காலம் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு அணியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

அதேநேரம் ஜோர்டன் கிரோகரி நெதர்லாந்து அணியின் ஆலோசகராக செயற்பட்டுவந்த நிலையில், இலங்கை அணியின் களத்தடுப்பு மற்றும் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

இவர் உயர் செயற்திறன் மையம் உட்பட இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்படவுள்ளார். இவரின் பதவிக்காலம் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post