ஹட்டன் டிப்போவின் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்துசாலையால் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சுற்றுலா பேருந்து இன்று ஆறாம் (06) திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து சாலை மேலாளர் எம். பாலித பண்டாரா இதனை தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரத்மலானை பணிமனையிலிருந்து பெறப்பட்ட ஒரு பழைய பேருந்தினை சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது.
அந்தப் பேருந்தில் 42 இருக்கைகள் உள்ளன.
தனது பொறியியல் துறை ஊழியர்களின் கடின உழைப்பால் இந்த சுற்றுலா பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பேருந்து செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பு அதில் ஸ்டுடியோ ஒலி அமைப்பு, குளிர்சாதனப்பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவை பொருத்தப்படும்.
மத்திய மாகாணத்தில் உள்ள ஹட்டன் பணிமனையில் மட்டுமே தற்போது இத்தகைய பேருந்து உருவாக்கப்படுள்ளது
புதிய சீருடை அணிந்த சாரதி மற்றும் நடத்துநர் இப்பேருந்திற்காகப் பணியமர்த்தப்படுவார்கள் என இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து சாலை மேலாளர் எம். பாலித பண்டாரா தெரிவித்தார்.



Post a Comment