பலரது கவனத்தையும் ஈர்த்த பகிடியா கதைப்போம் குழுவினரின் ஆக்கிரமிப்பு குறும்படம்

 


"நாங்கள் போராடுறது சிங்கள மக்களுக்கு எதிராக இல்லை. தமிழுக்காகவும் தமிழ் மொழியைப் பேசுபவர்களின் இருப்புக்காகவும் தான். அந்த அரசியல் தெளிவு எங்களுக்கு இருக்குது" என்று கதையின் நாயகன் படத்தின் இடையில் சொல்லும் காட்சிகளுடன் விரிகிறது 10 நிமிடங்களுக்குள் வரும் பகிடியா கதைப்போம் குழுவினரின் புதிய குறும்படம். 

பகிடியா கதைப்போம் குழுவினரின் செம்மணி 1996, 1956 Ceylon | தனிச் சிங்களச் சட்டம் ஆகிய வெற்றிகரமான குறும்படங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பு - Land and Tamils in Sri Lanka என்ற குறும்படம் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்டு  17 ஆண்டுகளாகியும் சிறீலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை மீட்க போராடுபவர்களின் உயிரோட்டமுள்ள கதையாக உணர்வைத் தொடுகின்றது. 

வடக்கில் நடக்கும் தொடர் ஆக்கிரமிப்புகளை, பிரதான அரசியல் பிரச்சினைகளை பிரதான சிங்கள ஊடகங்கள் தொடர்ந்தும் மூடி மறைத்தே வருகின்றன. குறித்த படத்தில் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அடையாளமாக ஒரு சிங்களப் பெண்ணைக் கொண்டு நடிக்க வைத்தது சிறப்பு, அவரும் அபாரமாக நடித்திருக்கிறார். 

எமது தேசத்திலும் சிறப்பான திரைக்கதையோடு அற்புதமான திரைப்படங்களை அளிக்கக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்பதனை தொடர்ந்தும் நிரூபித்தவண்ணம் உள்ளார்கள். 


Post a Comment

Previous Post Next Post