உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற 17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

 


முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆவது ஆண்டு பிரதான நினைவேந்தல் நிகழ்வு 18.05.2026 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு- வடக்கு கிழக்கு சார்பாக, கொள்கைப் பிரகடன அறிவிப்புடன் தொடங்கிய நிகழ்வில், 10.29 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டது.



அதையடுத்து, 10.30 மணியளவில், அகவணக்கம் ஒரு நிமிட இடம்பெற்றதை அடுத்து, 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, சமநேரத்தில் உறவினர் தமது உறவுகள் நினைவாக ஒற்றைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.



இதையடுத்து, பொது நினைவுச் சின்னத்தில், மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.



இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு முள்ளிவாய்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக தமது அஞ்சலியை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அணிதிரண்டு வந்திருந்தனர். 

முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் பாதையெங்கும் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு பகிர்ந்தளித்ததோடு தாகசாந்தி நிலையங்களும் அமைத்து மக்களுக்கு தாகம் தீர்த்தனர். 














Post a Comment

Previous Post Next Post