2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 மற்றும் 2026 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும் காலம் இம் மாதம் 19ஆம் திகதி வரையில் நீடிக்கும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி இதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் ஆரம்பமாகின.
விண்ணப்பங்களுக்கான மென் பிரதியினை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் தரவிறக்கம் செய்யலாம்.
176,527 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Post a Comment