இசிதோர் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா வெகுவிமரிசை (Video)



யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா-2026 இன்று சனிக்கிழமை (20.06.2026) பிற்பகல்-02 மணி முதல் ஏழாலை புனித இசிதோர் தேவாலய வளாகத்தில் மேற்படி தேவாலயப் பங்குத் தந்தை அருட்பணி. மைக்கல் முத்து நிக்சன் கொலின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.  

இந் நிகழ்வில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் பிரதம விருந்தினராகவும், யாழ்.ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் அதிபர் திருமதி.சந்திரலதா கனேந்திரன் சிறப்பு விருந்தினராகவும், ஏழாலை தமிழ்ப் பொதுப் பணிமன்றத் தலைவர் கந்தசாமி சிறியானந்தன், சமூக சேவையாளர் ம.சுரேஷ் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.


இதன்போது இடம்பெற்ற மழலைகளின் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் மனங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருந்தன.





Post a Comment

Previous Post Next Post