வாட்ஸ்அப் ஊடாக நிதி மோசடி - சந்தேகமான கோப்புகளை திறக்க வேண்டாமென பொலிஸார் எச்சரிக்கை

 


வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஊடாக அனுப்பப்படும் ஆபத்தான மென்பொருட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் புதிய வகை நிதி மோசடிகள் குறித்து பொலிஸாரால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டணப் பட்டியல்கள் அல்லது அதிர்ஷ்ட இலாப அறிவிப்புகள் என்ற பெயரில் இந்த மோசடி கோப்புகள் அனுப்பப்படுகின்றன.

இவற்றைத் தரவிறக்கம் செய்யும் போது, கையடக்கத்தொலைபேசியில் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோசடிக்காரர்கள் கையடக்கத்தொலைபேசித் திரையைக் கட்டுப்படுத்துவதுடன், வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய இரகசிய OTP இலக்கங்களையும் திருடி பணத்தை மோசடி செய்கின்றனர்.

எனவே, அறிமுகமில்லாத அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களிடமிருந்து வரும் எந்தவொரு கோப்பையும் திறக்க வேண்டாம்.

அத்துடன், தங்களது கையடக்கத் தொலைபேசிகளிலுள்ள Install Unknown Apps என்ற தெரிவை செயலிழக்கச் செய்யுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post