கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர் விநியோகம் தடை

 


கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (05) இரவு 8.00 மணி முதல் நாளை(6) காலை 8.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தற்போது நிலவி வரும் கடும் வரட்சியான வானிலை மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால், முறையான நீர் முகாமைத்துவத்தை முன்னெடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு, தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன், நிலவும் வரட்சியான வானிலையைக் கருத்திற்கொண்டு நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் நிலவும் வானிலை மாற்றம் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொறுத்து, நீர் விநியோகத்தில் மேலும் மாற்றங்கள் அல்லது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post