வடக்கு ரயில் மார்க்கத்தின் கொழும்பு – கோட்டை முதல் காங்கேசன்துறை ரயில் நிலையம் வரையிலான சேவைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
டிட்வா புயலால் வடக்கு ரயில் மார்க்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாகவே, மாகோ சந்தி வரை மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெற்று வந்தன.
சேதமடைந்த வடக்கு மார்க்க புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையிலேயே, வடக்கு ரயில் மார்க்க சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி காலை 05.15க்கு கல்கிஸ்ஸையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் ரயில் மற்றும் பிற்பகல் 01.50க்கு காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸைக்கு செல்லும் நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில்களுக்கான ஆசன பதிவுகளை இன்று முதல் மேற்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment